எஸ். சுபாஷினி
([email protected])

அரசு வேலை, திருமணம் மற்றும் ஆஸ்துமா கோளாறு பற்றி கேட்டிருக்கிறார்.

31-7-1998-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். 6-ஆமிடத்தில் சனி நீசம். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு கிடையாது. மேலும் கிடைத்த தனியார் வேலையையும் சட்டென்று விட்டு விடக்கூடாது.சனி, செவ்வாய் சம்பந்தம் மற்றும் புதன், கேது பார்வை. எனவே விருப்பத் திருமணம் நடக்கும்.ஆரோக்கியத்துக்குரிய 5-ஆம் அதிபதி. நீச கிரக சாரத்தில் உள்ளார். எனவே பரம்பரையாக நோய் இருக்கும்.நடப்பு சனி தசை. இதில் சனி புக்தி 2027 ஜூலைவரை. இதில் எந்த நல்ல விஷயமும் நடக்க வாய்ப்பில்லை.அடுத்துவரும் புதன் புக்தியில் திருமணம் நடக்கும். அது விருப்பத் திருமணமாக இருக்கும்.உங்கள் நோய் பற்றி கேட்டிருக்கிறீர்கள். இந்த சனி தசை காலகட்டத்தில், நீங்கள் ஆயுர்வேதம் சார்ந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள். நோய் படிப்படியாக குணமாகும். உங்கள் நோய் அலர்ஜி சார்ந்திருக்கும்.இந்த ஜாதகப்படி, இவர் குலதெய்வத்துக்கு அவ்வப்போது நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கவேண்டும்.இவ்விதம் கடுமையான நோய் தாக்க முள்ளவர்கள், உங்கள் ஊரின் அருகில், மலைமீது அமர்ந்த சிவன் அல்லது முருகரை வழிபடுங்கள்; நோய் தாக்கம் குறையும். 

Advertisment

ஆர். கதிரேசன்.
([email protected])

இவர் வேலை, வழக்கு, வருமானம் பற்றி கேட்டுள்ளார்.

16-11-1974-ல் பிறந்தவர். துலா லக்னம் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம்.ஜாதகத்தில் சூரியன்+செவ்வாய்+ புதன்+லக்னம் சேர்ந்து கிரக யுத்தம் பெறுகிறது. 2-ஆமிடத்தில் சந்திரன்+சுக்கிரன்+ராகு இது மூன்றும் சேர்ந்து கிரக யுத்தம் பெறுகிறது.இதில் சூரியன் நீசம், சந்திரன் நீசம். இந்த ஜாதக அமைப்புப்படி, பணவரவு என்பது ரொம்ப குறைவாகவே இருக்கும். வரும் பணமும் உடனடியாக செலவழிந்து விடும்.லக்னத்திலுள்ள செவ்வாய், புதன், சூரியன் "எப்படா சண்டை வரும் வச்சு செய்யலாம்' என்று எதிர்பார்க்கும் எண்ணம் கொடுக்கும். எனவே வழக்கு வந்துகொண்டேதான் இருக்கும்.நடப்பு சந்திர தசை முடியப்போகிறது. 2026 ஏப்ரல் மாதம் செவ்வாய் தசை ஆரம்பிக்கும். செவ்வாய் தசை, குரு புக்தி ஆரம்பித்தவுடன், உங்கள் வழக்குகள் சரியாகிவிடும்.இவ்விதம் சந்திரன்+சுக்கிரன்+ராகு சம்பந்தம் பெற்று, 2-ஆமிடத்தில் அமர்ந்த ஜாதகர்கள் சயன கோலத்தில் அல்லது மலைமீதுள்ள பெருமாளை வணங்குங்கள்.

Advertisment

கிருஷ்ண பிரதாப் சிங், திருக்கோவிலூர்.
([email protected])

குட-றக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாமா என கேட்டிருக்கிறார்.?

4-1-1956-ல் பிறந்தவர். மேஷ லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். 8-ஆமிடத் தில் சனியும், 8-ஆம் அதிபதியும் சேர்க்கை. எனவே தீர்க்காயுள் ஜாதகம்.நடப்பு புதன் தசையில் புதன் புக்தி. 8-4-2026 வரை. அனேகமாக அடுத்துவரும் புதன் தசை, கேது புக்தி உங்களுக்கு அறுவை சிகிச்சை கொடுக்கும்.இவ்விதம் அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின், வீட்டில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.

தர்மராஜ், ஆவடி.

பேரனின் உயர்கல்வி பற்றி கேட்டுள்ளார்.

பேரன் விக்னேஷ் கிஷோர் 3-9-2010-ல் பிறந்தவர். துலா லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம்.நடப்பு ராகு தசை. இதில் சுக்கிர புக்தி 2026 ஆகஸ்ட் வரை. அதன்பின் வரும் சூரிய புக்தியில், இந்த ஜாதகர் மேல்படிப்புக்காக வெளியூர், வெளிநாடு சென்றுவிடுவார்.சூரியனும், புதனும் ஒரே நட்சத்திரத்தில் நின்று புதாத்ய யோகம் பெறுகின்றனர். எனவே உயர்கல்வி, அரசு சார்ந்த கல்லூரிகளில், வெளியிடத்தில் அமையும்.இவருக்கு அம்சத்தில் சனி மற்றும் சந்திரன் நீசம். ஆனால் அம்சத்தில் புதன் உச்சம். இது சற்று மறதியை கொடுத்தாலும், ஒருமாதிரி கல்வியில் முதன்மை பெற்றுவிடுவார். அனேகமாக, உங்கள் குலதெய்வம் காளி யாக இருக்கக்கூடும். அவளைத் தொடர்ந்து வணங்குங்கள்.மாணவர்கள் மறதியால் சிரமப்பட்டால், ஆஞ்சனேயரையும், சாய்பாபாவையும் வணங்குங்கள். 

Advertisment

மகேஸ்வரன், திருச்சி.

லக்னத்தில் சனி இருப்பதால் காலதாமதத் திருமணம் என்கிறார்கள். எப்போது இல்லறம் அமையும்?

12-11-1988-ல் பிறந்தவர். தனுசு லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம், ராசி, லக்னத்துக்கு 4-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷமுள்ளது. சனி 7-ஆம் வீடு மற்றும் களத்திரகாரகன் சுக்கிரனை பார்க்கிறார். சுக்கிரன் நீசபங்கம். 7-ஆம் அதிபதி, நீச சூரியனோடு உள்ளார். சனி+சந்திரன் இணைவு. இவ்வளவு காரணங்களால்தான் திருமணம் தாமதமாகிறது. நடப்பு சந்திர தசையில் சனி புக்தி. இதில் திருமண வாழ்வில் சிரமப்பட்டு, மீண்டுவந்த பெண்ணுடன் திருமணம் நடக்கும். இது 2027 பிப்ரவரி மாதத்திற்குள் நடக்கும்.சந்திர தசை நடப்பதால், உங்கள் ஊரிலுள்ள அம்மனுக்கு, புடவை வாங்கி சாற்றி, விளக் கேற்றி வழிபடுவதாக வேண்டிக்கொள்ளவும்.திருமணம் தாமத ஜாதக காரணங்கள் கொண்டவர்கள், தா- தானம் போன்ற பரிகாரங்களை முத-லேயே செய்துவிடுங்கள். 

ராஜி சுப்பிரமணியன், சிவகங்கை.
([email protected])

எப்போது திருமணமாகும் எனக் கேட்டுள்ளார்.

29-10-1996-ல் பிறந்தவர். மகர லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். ராசியில் சந்திரன் உச்ச வர்க்கோத்தமம். இது ரொம்ப விசேஷமான அமைப்புத்தான். ஆனால், இந்த ஜாதகருக்கு ஆவர் 7-ஆம் அதிபதியாகி 5-ல் உச்சமாவது இடிக்கிறது.இதில் 5-ஆம் அதிபதி சுக்கிரன் நீசபங்கம். ராகுவுடன் அமர்ந்துள்ளார். ஆக, வேலை செய்யும் இடத்தில், பிறமத காதல் இருந்து, அது பெயிலாகி இருக்கலாம்.இந்த ஜாதகர், பிறமத காதலை அல்லது கல்யாணத்தை, மனதில் வைத்துக்கொண்டு, இப்போது திருமணத்தை தள்ளி போட்டுக் கொண்டுள்ளார். சனி, சந்திரன் சம்பந்தம் இதனை சுட்டிக் காட்டுகிறது.சனி, 7-ஆம் அதிபதி. களத்திரகாரகர் சுக்கிரன் மற்றும் அயன, சயன அதிபதி குரு இவர்களைப் பார்த்து கல்யாணத் தடை, தாமதம் ஏற்படுத்துகிறார்.நடப்பு ராகு தசை. இதில் செவ்வாய் புக்தி 2026 பிப்ரவரியில் ஆரம்பிக்கிறது. இது 2026 மார்ச்வரை உள்ளது. அப்போது மறுமணமாகதா- பாக்கியம் கண்டிப்பாக உண்டாகிவிடும்.உங்கள் குலதெய்வத்துக்கு அபிஷேகம் மற்றும் பிரசாதங்களுடன் வணங்குங்கள்.சனிபகவான், சந்திரன் மற்றும் நீச சுக்கிரன்+ராகு மற்றும் அயன, சயனம் எனும் 12-ஆமிடத்தையும் பார்த்தால், கண்டிப்பாக கல்யாணத்தில் குழப்பம் உண்டாக்கி விடுவார். இதுபோல் ஜாதக அமைப்புகொண்டவர்களுக்கு, சீக்கிரமாக, திருமணம் முடித்து வைப்பது நல்லது.அவர்கள் யாரை விரும்புகிறார்கள் என சற்று கண்காணிப்பது நல்லது.           ப்